வரும் 25ஆம் தேதி திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர், முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி தொடரும் என தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
மேலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் 25ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் என தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
மே 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.