வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு : முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்


வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு : முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 26 Feb 2021 5:29 PM GMT (Updated: 26 Feb 2021 5:29 PM GMT)

வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

சென்னை

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்கு  சென்னை பசுமைவழிச்சாலை சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார். 

தொடர்ந்து, நிருபர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமுதாயத்துக்கு உள்ஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டாக பாமக போராட்டம் நடத்தி வருகிறது. வன்னியர் சமுதாயத்துக்காக போராடி பல முறை சிறை சென்று வந்துள்ளார் ராமதாஸ் என்றும் தெரிவித்தார்.

Next Story