சட்டசபை தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்


சட்டசபை தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 March 2021 9:32 PM GMT (Updated: 8 March 2021 9:32 PM GMT)

தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் இந்த தொகுதிகளில் இருந்து வெறும் 20 பெண்கள் மட்டுமே எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உள்ளனர். ஆனால், சட்டசபை உறுப்பினர் பதவிகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது இல்லை. ஐ.நா.சபை கூட, 2030-ம் ஆண்டுக்குள் ஆண்களுக்கு இணையான வாய்ப்புகளை பெண்களுக்கும் பெற்றுத்தர வேண்டும் என்று தீர்மானம் இயற்றியுள்ளது.

சமத்துவம் இல்லை

இதுவரை அரசியல், நிர்வாகம், சட்டசபை என்று எதிலும் பாலின சமத்துவம் என்பது இல்லை.

தமிழக சட்டசபைத் தேர்தலில் ஆண்களுக்கு இணையான பிரதிநிதித்துவத்தை பெண்களுக்கும் வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி தமிழக அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கை மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பரிசீலிக்க வேண்டும்

அப்போது, தேர்தலில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்த முடிவு எடுத்து சட்டம் இயற்றுவது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளித்து வாதிடப்பட்டது.

அதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story