மாநில செய்திகள்

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது? இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு + "||" + DMK When is the list of candidates? Opportunity to come out today or tomorrow

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது? இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது? இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை, 

கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 6 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 3 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட உள்ளன.

இன்று முடிவாகிறது

இதில் ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலான இடங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு சில தொகுதிகளை மட்டும் இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு இந்த கட்சிகள் போட்டியிடும் இடங்கள் எவை? என்ற பட்டியல் இன்று மதியத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அல்லது நாளை

தற்போது அ.தி.மு.க.வில் 2 கட்டங்களாக 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளதால், தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் காணப்படுகிறது.

இந்தநிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணி தொடங்கிவிட்டதாகவும், இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.
3. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.