அண்ணா பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா; ஜனாதிபதி பங்கேற்பு


அண்ணா பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா; ஜனாதிபதி பங்கேற்பு
x
தினத்தந்தி 11 March 2021 7:20 AM GMT (Updated: 11 March 2021 7:20 AM GMT)

அண்ணா பல்கலை கழகத்தில் தங்க பதக்கங்கள் மற்றும் முதல் வகுப்பு பட்டம் பெறுபவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.

சென்னை,

அண்ணா பல்கலை கழகத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்பு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.  அவர் பேசும்பொழுது, எனக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த பாரத் ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமும் இந்த பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவராக இருந்துள்ளார் என்பதனால், அண்ணா பல்கலை கழகத்திற்கு நான் வருகை தருவது எனக்கு கவுரவமளிக்கும் விசயம் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.  அவர்களில் 45 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.

இதேபோன்று, மொத்த மாணவ மாணவியர்களில் தங்க பதக்கங்கள் மற்றும் முதல் வகுப்பு பட்டம் பெறுபவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.

Next Story