நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 25 March 2021 9:23 AM GMT (Updated: 25 March 2021 9:23 AM GMT)

நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பரவலாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. அடுத்து வரவிருக்கும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 

காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட காலநிலை நிலவும். 

வரும் 27 முதல் 29 வரை தமிழகம் மற்றும் புதுவை-காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட காலநிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story