நாளை முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை ; வியாபாரிகள் போராட்டம்


நாளை முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை ; வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2021 6:47 AM GMT (Updated: 9 April 2021 6:47 AM GMT)

நாளை முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தமிழக அரசு பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்துள்ளது. 

முக கவசம் அணியாதவர்கள் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவது கிடையாது. மார்க்கெட் வளாகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறது. தினந்தோறும் இரவு 7 மணியில் இருந்து மறுநாள் பகல் 12 மணி வரையில் மார்க்கெட் செயல்படுகிறது. இந்தநிலையில் கொரோனா அச்சம் காரணமாக கோயம்பேடு 

மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்திருக்கிறது. சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் மட்டுமே மார்க்கெட் வளாகத்துக்குள் சென்று வருகிறார்கள்.விலையில் மாற்றம் இல்லாதபோதும், பொதுமக்கள் வரத்து குறைந்ததால் காய்கறி விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள். 

நாளை முதல்  கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதித்துள்ளதால், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகம் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று பிற்பகலில் சி.எம்.டி.ஏ நிர்வாக செயலாளருடன் கோயம்பேடு முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் சில்லறை வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Next Story