மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 11 April 2021 8:01 AM GMT (Updated: 11 April 2021 8:01 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலை நிலவு வருகிறது. அடுத்து வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் வெப்பநிலை மேலும் அதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கோவை ,நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் மழை பெய்யும்.

குமரி கடல் பகுதியில் 1.5 முதல் 2.1 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் ,புதுச்சேரி ,காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
 
வருகின்ற 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story