மாநில செய்திகள்

சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை + "||" + Moderate rain in places including koyembadu and Anna Nagar in Chennai

சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை

சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை
சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
சென்னை,

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெயிலின் கோரத்தாண்டவத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை பிற்பகல் நேரங்களில் தவிர்த்து வந்தனர். அதிலும் கடந்த மாதம் இறுதியில் இயல்பை விட வெப்பத்தின் அளவு அதிகமாக பதிவானது.

வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே சாரல் மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரையிலான 4 நாட்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் விருகம்பாக்கம், சாலிகிராமம் , கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதைபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, கீரமங்கலம், ஆலங்குடி, வடகாடு, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. சென்னை சி.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்தவர்: கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்த சென்னை சி.பி.சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கொரோனா தொற்றுக்கு பலியானார்.
3. ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தன
ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
4. போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 50 விமானங்கள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து சென்று வரவேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
5. ஏப்ரல் 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.