மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது- சுகாதாரத்துறை செயலாளர் + "||" + Corona vulnerability is on the rise in Tamil Nadu Secretary of Health

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது- சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது-  சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை புதியஉச்சத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தொட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.  தற்போது பொது முடக்கம் போடும் சூழ்நிலை இல்லை. இரண்டு வாரங்கள் மக்கள் வீட்டிலிருந்து யாரால் வேலை பார்க்க முடியுமோ, அவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் அரசு உத்தரவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.

தற்போது நோயாளிகளுக்கு தேவையான வெண்டிலேட்டர் உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 81 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

தமிழகத்தில் இதுவரை முக கவசம் போடாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து, ரூ.5.7 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்  என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தொடரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு தொற்று பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா 2-வது அலை எப்போது குறையும்- நிபுணர் தகவல்
தடுப்பூசிகளின் நிலைகளைப் பொருத்து இந்தியா கொரோனாவின் பல அலைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.
3. இரண்டாம் அலை: கிராமபுறங்களில் அதிகளவு பரவும் கொரோனா தொற்று
கொரோனா இரண்டாம் அலையில், கிராமபுறங்களில் தொற்று அதிகமாக பரவுகிறது.
4. ராஜீவ் காந்தி கொலை வழக்கு:கொரோனாவால் முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.
5. தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.