மாநில செய்திகள்

டி.ஆர்.பாலு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + TR Balu - anbil Mahesh Poyyamozi confirmed in covid

டி.ஆர்.பாலு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டி.ஆர்.பாலு - அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு  கொரோனா பாதிப்பு உறுதி
திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், தீவிர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆகிறார்.

இந்நிலையில், திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும் அத் தொகுதியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அவர் ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: நிதிஷ் குமார் அறிவிப்பு
பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
2. லண்டனில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்
லண்டனில் இருந்து விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழகம் வந்தடைந்தன.
3. பிரேசிலில் மேலும் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரேசில் உள்ளது.
4. இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தாருக்கு கொரோனா பாதிப்பு; ஐ.சி.யூ.வில் அனுமதி
கொரோனா பாதித்த இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது; ஒருவர் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.