மாநில செய்திகள்

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் - தமிழக அரசு + "||" + Ariyar exams will be conducted online - Government of Tamil Nadu

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் - தமிழக அரசு

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் - தமிழக அரசு
கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தல் இன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரியர் தேர்வு ரத்து அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

அரியர் மாணவர்களுக்கு மே 17ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தம்
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்
தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
3. இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை - தமிழக அரசு அறிவிப்பு
திங்கள் கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மே 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு; வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு; மறுஉத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தமிழக அரசு அறிவிப்பு
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைெபறும் 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
5. ஒன்றரை கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.