மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Night curfew in Tamil Nadu from 10 pm to 4 am - Chief Minister Palanisamy announcement

தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2 அலை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* தமிழகத்தில் 20 ஆம் தேதி முதல்  இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்

* தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.

* 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

* பெட்ரோல்,டீசல் பங்குகளுக்கு தொடர்ந்து அனுமதி.

* இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து.

* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டிற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!
தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது - அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் - தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் விரைவில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.