முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை -டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்


முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது  விற்பனை -டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
x
தினத்தந்தி 19 April 2021 10:06 AM GMT (Updated: 19 April 2021 10:06 AM GMT)

முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை என டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அற்வ்விக்கப்பட்டு உள்ளது.

சென்னை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

டாஸ்மாக் கடைகளில் எந்தெவொரு கூட்ட நெரிசலும் இருக்க கூடாது. 

இரண்டு வாடிக்கையாளர் இடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கடை பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி, முக கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும். 

டாஸ்மாக் கடையை ஒரு நாளைக்கு இரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

மதுபிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்ய வேண்டும்.

முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும்

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

மதுக்கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story