தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு


தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 3:18 PM GMT (Updated: 23 April 2021 3:18 PM GMT)

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

புதுச்சேரியில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 

புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Next Story