மாநில செய்திகள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி + "||" + Congress candidate Vijay Vasant wins Kanyakumari constituency

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
நாகர்கோவில், 

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையொட்டி கடந்த மாதம் 6-ந் தேதி நடந்த தமிழக சட்டசபை பொது தேர்தலோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைதேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி பொது செயலாளருமான விஜய் வசந்த் என்ற விஜயகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

விஜய் வசந்த் வெற்றி

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணனை விட சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வந்தார். ஒன்றிரண்டு சுற்றுகளில் பொன். ராதாகிருஷ்ணன் முந்தினார்.

இறுதியில் விஜய் வசந்த் 5 லட்சத்து 67 ஆயிரத்து 280 வாக்குகள் பெற்றிருந்தார். பொன்.ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 32 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று பின்தங்கினார். இதனால், பா.ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

மொத்த வாக்குகள்- 15,71,651

பதிவான வாக்குகள்

- 10,82,820

விஜய் வசந்த் (காங்கிரஸ்)

- 5,67,280

பொன்.ராதாகிருஷ்ணன்

(பா.ஜனதா)- 4,32,906

அனிட்டர் ஆல்வின்

(நாம் தமிழர் கட்சி)- 52,221

சுபா சார்லஸ் (மக்கள்

நீதி மய்யம்)- 4,899

தொடர்புடைய செய்திகள்

1. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் மாபெரும் வெற்றி: தாத்தாவை மிஞ்சிய பேரனாக உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்
தனது தாத்தாவை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றும், அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தாத்தாவை மிஞ்சிய பேரனாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முத்திரை பதித்துள்ளார்.
2. தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி
தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
3. கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
4. காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி
காட்பாடி தொகுதியில் 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். அவர், கடைசி சுற்றுவரை போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
5. பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.