மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறுதேர்வு தேதி அறிவிப்பு + "||" + Announcement of re exam date for Anna University campus colleges

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறுதேர்வு தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால், மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வும், கடந்த ஆண்டு நவம்பர் அரியர் தேர்வு மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் அரியர் தேர்வு ஆகியவையும் மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

எனினும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 4 வரை ஆன்லைன் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும் என்றும் மற்ற மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளுக்கான மறுதேர்வு தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால், மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வும், கடந்த ஆண்டு நவம்பர் அரியர் தேர்வு மற்றும் இந்த ஆண்டு ஏப்ரல் அரியர் தேர்வு ஆகியவையும் மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

எனினும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 4 வரை ஆன்லைன் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும் என்றும் மற்ற மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.