நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 9:25 AM GMT (Updated: 16 May 2021 9:25 AM GMT)

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்தே புயல் காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 286 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6,327 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 88.42 அடியாகவும், நீர் இருப்பு 20.5 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பவானி ஆற்றில் 1,050 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Next Story