மாநில செய்திகள்

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி + "||" + Corona relief Rs.2 thousand Grandmother sent to First-Minister Fund

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி
தமிழக அரசு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது.
தேனி,

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய் தொற்றில் இருந்து மக்களை காக்கவும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சி சுக்காங்கல்பட்டியை சேர்ந்த பழனிசாமி மனைவி ரத்தினம்மாள் (வயது 74). இவர் தங்களுக்கு அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பினார். வயதான இந்த தம்பதி தங்கள் பிள்ளைகள் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் தங்களால் இயன்ற உதவியை அரசுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை கொடுத்ததாக ரத்தினம்மாள் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. 78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 78 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரணத்தை கலெக்டர் வழங்கினார்.
2. சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
3. கொரோனா நிவாரணம் ரசிகர்கள் வங்கி கணக்கில் பணம் போட்ட சூர்யா
கொரோனா 2-வது அலை ஊரடங்கினால் மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
4. கொரோனா நிவாரணம் சூரி ரூ.10 லட்சம் உதவி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் நடிகைகள் பலர் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
5. கொரோனா நிவாரணம் வழங்க பிரியங்கா 5 யோசனைகள்: யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம்
நடுத்தர வகுப்பினருக்கு கொரோனா நிவாரணம் வழங்க யோகி ஆதித்யநாத்துக்கு, பிரியங்கா காந்தி 5 யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதினார்.