மாநில செய்திகள்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்வு + "||" + Petrol price hiked by 25 paise in Chennai today

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்தது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. 

இதனால் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.51-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.89.65-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.95.76-க்கும், டீசல் விலை 25 காசுகள் ரூ.89.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
3. வரலாறு காணாத உச்சம்; ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100 ஆக உயர்வு
எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்துள்ளது.