மாநில செய்திகள்

நெல்லையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கொரோனாவுக்கு பலி + "||" + Sub-Police Superintendent Corona killed in Nellai

நெல்லையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கொரோனாவுக்கு பலி

நெல்லையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கொரோனாவுக்கு பலி
நெல்லையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கொரோனாவுக்கு பலி.
நெல்லை,

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் சாமிநாதன் (வயது 48). இவர் கடந்த 14-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் சாமிநாதன் பரிதாபமாக இறந்தார்.


கொரோனாவுக்கு இறந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனுக்கு யமுனா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சாமிநாதனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டாக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்த நிலையில் சாமிநாதன் கொரோனாவுக்கு இறந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
2. ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலி
குளித்துவிட்டு கரையேறியபோது ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
3. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலி
ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலியானார். டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலி
ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலியானார். டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5. ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி
ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலியான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.