தமிழ்நாட்டில் 32,646 கொரோனா சிகிச்சை படுக்கைகள் காலியாக உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழ்நாட்டில் 32,646 கொரோனா சிகிச்சை படுக்கைகள் காலியாக உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 5 Jun 2021 7:32 AM GMT (Updated: 5 Jun 2021 7:32 AM GMT)

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 32ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியதாவது:-

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக 2ஆயிரம் மருத்துவர்கள், 6ஆயிரம் செவிலியர்கள், 3,700 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 600 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது, எந்தவொரு இடத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை .

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழகத்துக்கு 30ஆயிரம் என்ற அளவில் மருந்து தேவைப்படுகிறது ஆனால் மத்திய அரசு 1790 மருந்துகள் மட்டுமே ஒதுக்கியுள்ளது.

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Next Story