மாநில செய்திகள்

உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண்சரிவு; 2 தொழிலாளர்கள் சாவு + "||" + Landslide at Kalkuvari near Uttiramerur; Death of 2 workers

உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண்சரிவு; 2 தொழிலாளர்கள் சாவு

உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண்சரிவு; 2 தொழிலாளர்கள் சாவு
உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்ககள் பரிதாபமாக இறந்தனர்.
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் கற்களை பெயர்த்து எடுக்கும் பணிக்காக 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று இரவு பொக்லைன் எந்திரம் கொண்டு செல்லப்பட்டது.


அப்போது திடீரென அருகில் மண் சரிவு ஏற்பட்டு பொக்லைன் எந்திரம் மற்றும் தொழிலாளர்களான வடமாநிலத்தை சேர்ந்த சுனில்குமார்(வயது 30), சேர்கான் அன்சாரி அதனடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.

பிணமாக மீட்பு

இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் மண்சரிவில் சிக்கிய இருவரையும் பிணமாக மீட்டனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் ரெயில் நிலையத்தில் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள்
விருதுநகர் ரெயில் நிலையத்தில் தவித்த வெளிமாநில தொழிலாளர்களை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. சிக்பள்ளாப்பூர் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு
சிக்பள்ளாப்பூர் அருகே, ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
3. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை சாவு
பேச்சிப்பாறையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை பரிதாபமாக இறந்தது.
4. திருநின்றவூரில் மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவு
திருநின்றவூரில் காலில் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவதியடைந்த மூதாட்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
5. மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு
மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம் நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் சாவு.