மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை + "||" + Case against former minister Manikandan: Police move to get a secret confession from actress Chandini

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் நடிகை சாந்தினியிடம் மாஜிஸ்ரேட்டு மூலம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கருக்கலைப்பு செய்த டாக்டரிடமும் விசாரணை நடக்கிறது.
சென்னை,

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.


அதில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடமும் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கைது செய்ய தடை

இந்த நிலையில் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, 9-ந் தேதி (நாளை) வரை மணிகண்டனை கைது செய்ய தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள். அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார். அந்த ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை நடக்கிறது.

மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்த போது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சாந்தினி வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மணிகண்டன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

காவலாளியிடம் விசாரணை

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் விசாரணை நடத்தப்பட் டுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து வருகிறோம். சாந்தினியை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

கோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பழமையான கோவிலுக்கு அரசர் எழுதிவைத்த 400 ஏக்கர் நிலத்தையும், தாமிரப்பட்டயத்தையும் மீட்கக்கோரி வழக்கு
பழமையான கோவிலுக்கு அரசர் எழுதிவைத்த 400 ஏக்கர் நிலத்தையும், தாமிரப்பட்டயத்தையும் மீட்கக்கோரி வழக்கு பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
2. சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்
சட்டசபை வரலாற்றை மாற்றி தி.மு.க. விழா கொண்டாடுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்.
3. கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளித்ததில் விதிமீறல்; ம.நீ.ம. நிர்வாகிகள் மீது வழக்கு
கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை வரவேற்ற அக்கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
4. மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்தாரர்களின் மின்சார கட்டணம் திருத்தம் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
5. மின்தடை தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
மின்தடை தொடர்பான பொதுமக்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.