மாநில செய்திகள்

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை: ராதாகிருஷ்ணன் + "||" + Corona vaccine out of stock in 34 districts in Tamil Nadu: Public Welfare Secretary Radhakrishnan

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. தொற்று குறையாத 9 மாவட்டங்களில் நுண்திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை. நாளை முதல் 13-ம் வரை 6.5 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரை அரசு எதையும் மறைப்பதில்லை. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மறைக்காமல் வெளியிட்டு வருகிறோம். இதுகுறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். 

தமிழகத்தில் இதுவரை 1,01,19,582 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 21,02,648 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது - எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சத்தில் உள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,767 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
4. தமிழகத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.