மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை + "||" + NO change in petrol diesel price

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
சென்னை,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.  

கொரோனா பெருந்தொற்று சூழலால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், தனிநபர் வாகன பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ஐந்து முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது


தொடர்புடைய செய்திகள்

1. ஜூன் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
2. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: டீசல் ஒரு லிட்டர் ரூ.92-ஐ தாண்டியது
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. ஜுன்15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை.
4. பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: காங்கிரஸ் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் அறிக்கை விடுத்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை