வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு: பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி


வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு: பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 11 Jun 2021 12:27 PM GMT (Updated: 11 Jun 2021 12:27 PM GMT)

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை,

நாகராஜன் "பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி" என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்து செய்தனர்.

இதற்கிடையில், பயிற்சியாளர் நாகராஜன் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது, நாகராஜனின் மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் தர காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில்  தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகராஜனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story