தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு- டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி


தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு- டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 11 Jun 2021 1:16 PM GMT (Updated: 11 Jun 2021 1:25 PM GMT)

தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சில தளர்வுகளுடன்  ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வீட்டு உபயோக பொருட்கள் கடைகள்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி

உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி

சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏசி இன்றி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்புக்கு அனுமதி

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி 

செல்போன் உள்ளிட்ட மின்னணு விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்

மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்.


Next Story