முதுமலை யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனை முடிவில் தகவல்


முதுமலை யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனை முடிவில் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2021 3:09 AM GMT (Updated: 13 Jun 2021 3:09 AM GMT)

முதுமலை முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதால் யானை பாகன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நீலகிரி,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், முதுமலை யானைகள் முகாமில் இருந்த 28 யானைகளுக்கு கடந்த 3 நாட்களுக்கும் முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் மாதிரிகள் உத்தர பிரதேசத்தில் உள்ள வன உயிரின மற்றும் கால்நடை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. 

இதனை தொடர்ந்து முதுமலை யானைகள் முகாமில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் யானைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவுகளில், எந்த யானைக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் முதுமலையில் உள்ள யானை பாகன்கள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story