''விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் தேவை'' - சென்னை ஐகோர்ட்


விலங்குகளுக்கு உணவு கிடைக்க திட்டம் தேவை - சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 14 Jun 2021 2:25 PM GMT (Updated: 14 Jun 2021 2:25 PM GMT)

தெருவிலங்குகளின் பாதுகாப்பு, நாய்களுக்கான கருத்தடை நடைமுறையை மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கு திட்டம் வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா காலத்தில் தெரு ஓரங்களில் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தேவை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சிவா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தெரு நாய்களுக்கு உணவளிக்க கவர்னர் ரூ.10 லட்சம், தமிழக அரசு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். தெரு விலங்குகளின் பாதுகாப்பிற்கும் நாய்களுக்கு கருத்தடை நடைமுறையை செய்வதற்கும் திட்டம் வகுக்க வேண்டும்.

மேலும், கொரோனா அதிகரிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story