பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்


பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jun 2021 4:52 PM GMT (Updated: 14 Jun 2021 4:52 PM GMT)

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்.

சென்னை,

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினரகன் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே சமயம் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறைந்துள்ளதால், அவற்றின் விலையை, உற்பத்தி செய்யும் நாடுகள் உயர்த்தி வருகின்றன.

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும் என, தி.மு.க. தன் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதை நிறைவேற்ற வேண்டும் என, ஏற்கனவே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.

பெட்ரோல், டீசல் விலை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயர்ந்துகொண்டே செல்வதால், விலைவாசியும் உயர்ந்தபடியே இருக்கிறது. எனவே பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியை குறைப்போம் என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story