நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்


நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 16 Jun 2021 7:38 PM GMT (Updated: 16 Jun 2021 7:38 PM GMT)

தென்மேற்கு பருவகாற்று காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தென்மேற்கு பருவமழை கடந்த 3-ந்தேதி தொடங்கிய நிலையில், தற்போது கர்நாடகா பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்கிறது.

அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவகாற்று காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் இன்று (வியாழக்கிழமை) பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story