மாநில செய்திகள்

போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி + "||" + 10 lakh financial assistance to the family of Murugesan who died due to police attack

போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி
சேலத்தில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

 சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன்  என்பவர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது  ஏத்தாப்பூர் அருகே சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர்.

இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இன்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து,முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இந்நிலையில், காவலர் தாக்கி பலியான முருகேசனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவலர் தாக்கி விவசாயி பலியான துயரச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. செப்.1 -ல் பள்ளி-கல்லூரிகள் திறப்பு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
3. சட்டமன்ற பொன்விழா நாயகன் துரைமுருகன்; முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு
எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர் துரைமுருகன் என மு.க ஸ்டாலின் பாராட்டினார்.
4. மெட்ராஸ் தினம்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. 1639-இல் மதராசப்பட்டினமாக உருவான சென்னை மாநகரம் இன்று 382 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
5. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி:முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக நீதியை பாழ்படுத்தும் வகையில் பொய் விஷம பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில் கூறினார்.