சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு


சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
x
தினத்தந்தி 24 Jun 2021 1:10 AM GMT (Updated: 24 Jun 2021 1:10 AM GMT)

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு அதிகரித்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. 

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.65-க்கும், ஒரு லிட்டர் டீசல் லிட்டர் ரூ.92.83-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு அதிகரித்து ரூ.98.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 6 காசுகள் அதிகரித்து ரூ.92.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story