கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடு தகவல் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்


கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடு தகவல் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Jun 2021 6:52 AM GMT (Updated: 25 Jun 2021 6:52 AM GMT)

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் குற்றம், முறைகேடு நடந்தால் புகார் அளிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

சென்னை,

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் குற்றம், முறைகேடு நடந்தால் புகார் அளிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படுவதில் கோவில்கள் திறப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவில்களில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம். 

திருக்கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடுகளை தெரிவிக்க 044-2833999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார் உடனே கணினியில் பதிவு செய்யப்படும். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்படும். 

அந்த குறைகளின் நடவடிக்கைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். கோரிக்கைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 044-2833999 என்ற எண்ணில் கூறலாம் என்று கூறியுள்ளார்.

Next Story