தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 2 July 2021 1:12 AM GMT (Updated: 2 July 2021 1:12 AM GMT)

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.




சென்னை,

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெள்ளிக்கிழமையன்று, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை, விருதுநகா், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டி இருக்கும்.

வருகிற 5ந்தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் வீசக்கூடும்.  இதனால் குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


Next Story