தர்மபுரி மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று


தர்மபுரி மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 2 July 2021 5:39 PM GMT (Updated: 2 July 2021 5:39 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 68 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 208 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 24,703 ஆகும்.

Next Story