மாநில செய்திகள்

ஜெயலலிதா சமாதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடக்கம்: சசிகலா அறிவிப்பு + "||" + 4 Years Since Dramatic Vow, VK Sasikala Vows To Visit Jayalalithaa's Memorial After July 5

ஜெயலலிதா சமாதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடக்கம்: சசிகலா அறிவிப்பு

ஜெயலலிதா சமாதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடக்கம்: சசிகலா அறிவிப்பு
சசிகலா, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காமராஜ், பார்த்திபன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த உமாதேவன், ஆலப்பாக்கத்தை சேர்ந்த ஜீவானந்தம், திண்டுக்கலை சேர்ந்த ஆறுச்சாமி, தூத்துக்குடியை சேர்ந்த கலையரசி, தாம்பரம் பகுதியை சேர்ந்த நாராயணன் ஆகியோருடன் செல்போனில் பேசி உள்ளார்.
சசிகலா பேசியதாவது:- 

எனக்கு கடந்த 4 ஆண்டுகளாக தொண்டர்களிடம் இருந்து கடிதம் வருகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு வரும் கடிதங்களை படிக்கும்போது மனசு ரெம்ப கஷ்டமானது. அதனால் தான் அனைவரிடமும் பேசி வருகிறேன். ஜெயலலிதா எப்படி கட்சியை நல்லபடியாக கொண்டு போனார்களோ, அதே மாதிரி கொண்டு போக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஊரடங்கு 5-ந்தேதியுடன் முடிவடையும் என்று சொல்கிறார்கள். ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றுவிட்டு எல்லா இடத்துக்கும் சுற்றுப்பயணம் வருவேன். அனைவரையும் சந்திப்பேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்து இருந்தாலும், அவர்களுடைய மனசு நம்மை பார்த்துக் கொண்டிருக்கும். பாசத்தோட வளர்த்த கட்சி இது. அனைவரும் பார்த்து வியக்கும்படி என்னுடைய பணியை செய்வேன். தொண்டர்களோடு பயணித்து வெற்றியை நிச்சயம் பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் - தங்க தமிழ்செல்வன் பேட்டி
சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் என்று தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
2. நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா? சசிகலா விளக்கம்
நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினேனா? என்பது குறித்து சசிகலா பதில் அளித்துள்ளார்.
3. ‘தொண்டர்கள் மனக்குமுறலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது’ சசிகலா பேச்சு
‘தொண்டர்கள் மனக்குமுறலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது’ சசிகலா பேச்சு.
4. தொண்டர்கள் துணையுடன் அ.தி.மு.க.வை மீட்பேன் சசிகலா பேச்சு
தொண்டர்கள் துணையுடன் அ.தி.மு.க.வை மீட்பேன் சசிகலா பேச்சு.
5. ‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு
‘‘தொண்டர்களின் எண்ணப்படியே அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’’ சசிகலா பேச்சு.