மாநில செய்திகள்

இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு + "||" + Union Minister's opinion on reservation: Dr. Ramdas welcome

இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
இட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்தெந்த சாதிகளை சேர்த்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 102-வது திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மராத்தா வழக்கில் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.


கோர்ட்டு தீர்ப்பால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும், இந்த சமூக அநீதியைக் களைய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதை இப்போது மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளை சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக அரசியல் சட்டத்தின் 342-வது பிரிவை திருத்தும் மசோதாவை வரும் 19-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
2. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறது கர்நாடகாவிடம் காவிரி நீரை கேட்டுப்பெற வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைகிறது கர்நாடகாவிடம் காவிரி நீரை கேட்டுப்பெற வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
3. எடியூரப்பா அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைநாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும் என்றும், வேளாண் பணிகளுக்கும் அத்திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5. மேகதாது பிரச்சினை; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-