தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.376 உயர்வு


தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.376 உயர்வு
x
தினத்தந்தி 7 July 2021 12:01 AM GMT (Updated: 7 July 2021 12:01 AM GMT)

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் இந்த ஆண்டு இறுதியில் விலை உயர்வில் இருந்த தங்கம் விலை, அதன் பின்னர் சரிய தொடங்கியது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஒரு நாள் விலை அதிகரிப்பதும், மறுநாள் விலை குறைவதுமான நிலையிலே இருக்கிறது.

அந்தவகையில் கடந்த 2 மற்றும் 3-ந்தேதிகளில் விலை உயர்ந்து, நேற்று முன்தினம் சரிவை சந்தித்து, நேற்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 473-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 784-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.47-ம், பவுனுக்கு ரூ.376-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 520-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் 18-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன் பின்னர் விலை ஏற்ற, இறக்கத்துடன், தற்போதைய உயர்வால், 18 நாட்களுக்கு பிறகு, மீண்டும் ஒரு பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் அதிகரித்து இருக்கிறது. கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் உயர்ந்து, ஒரு கிராம் 75 ரூபாய் 20 காசுக்கும், ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

Next Story