பக்ரீத் பண்டிகை 21-ந்தேதி கொண்டாடப்படும்: தலைமை காஜி அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 July 2021 7:10 PM GMT (Updated: 2021-07-12T00:40:21+05:30)

பக்ரீத் பண்டிகை 21-ந்தேதி கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்துள்ளார்.

சென்னை, 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. 

இந்நிலையில் பக்ரீத் பண்டிகை தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் பல்வேறு இடங்களில் 11-7-21 (நேற்று) துல் ஹஜ் மாத பிறை தென்பட்டது. எனவே, நாளை (இன்று) துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத் பண்டிகை) வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story