தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை; கேரளாவில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை; கேரளாவில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 12 July 2021 7:21 AM GMT (Updated: 12 July 2021 7:21 AM GMT)

தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை கேரளாவில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை

சென்னை கோட்டூர்புரத்தில் ஜிப்ஸி காலனியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 3923பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 122 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழ்நாட்டில் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

கேரள எல்லையில் தமிழகப் பகுதிகளில் இரண்டாயிரத்து 660 வீடுகளில் பொதுமக்களுக்குச் சோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் தொற்று இல்லை. ஜிகா வைரஸ் தொற்று கர்ப்பிணிப் பெண்களை அதிகம் தாக்குவதாகக் கூறப்படும் தகவல் வெறும் ஊகம்.

கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் பொது மக்களையும் பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களில் 33 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அனைத்து மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள முதல்வர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கொரோனா மட்டுமில்லாமல் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சைகளும் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என கூறினார்.

Next Story