சென்னையில் 500 குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு


சென்னையில் 500 குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு
x
தினத்தந்தி 17 July 2021 7:20 AM GMT (Updated: 17 July 2021 7:20 AM GMT)

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 500 குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க உள்ளோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  கூறியதாவது:-

செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிர்க்கு இடஒதுக்கீடு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவற்றை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். 

மீஞ்சூர் மற்றும் வட நெம்மேலியில் 100 எம்.எல்.டி கடல் நீரை, குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. சென்னையில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் விதமாக குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டு வீடுகள் தோறும் தண்ணீர் வழங்கப்படும் .

சென்னையில் 500 இடங்கள் குளங்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது; தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க உள்ளோம் என கூறினார்.


Next Story