மாநில செய்திகள்

ஒருதலைக்காதலால் பயங்கரம்: பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை + "||" + Terror by one-headed love: Adolescent commits suicide by stabbing graduate girl

ஒருதலைக்காதலால் பயங்கரம்: பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை

ஒருதலைக்காதலால் பயங்கரம்: பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை
ஒருதலைக்காதலால் பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுடைய மகள் தனலட்சுமி(வயது 22). பட்டதாரி. மகேஸ்வரியின் தாய் வீடு கொளப்பாடி கிராமத்தில் உள்ளது. தனலட்சுமி, தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள வீட்டை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அருண்பாண்டியன்(30). இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். அருண்பாண்டியனின் தாய்-தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். மேலும் பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற தனலட்சுமியை பார்த்த அருண்பாண்டியன், அவரை ஒருதலையாக காதலித்து வந்தார். அவர் தனது கையில் தனலட்சுமியின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.


பெண் தர மறுத்தார்

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலட்சுமி வீட்டிற்கு அருண்பாண்டியன் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளார். அப்போது, அருண்பாண்டியன் தாய், தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருந்ததால், அவருக்கு பெண் தர முருகேசன் மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கொளப்பாடி கிராமத்தில் கோவில் திருவிழாவில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேற்று மகேஸ்வரி, தனலட்சுமி ஆகியோரை, அவர்களது உறவினரான ஆகாஷ்(22) தனது மோட்டார் சைக்கிளில் அல்லிநகரத்தில் இருந்து கொளப்பாடிக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் கொளப்பாடி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே தனலட்சுமியை, அருண்பாண்டியன் பார்த்துள்ளார். அப்போது, தனக்கு தர மறுத்த பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில், தனலட்சுமியை கொலை செய்ய அருண்பாண்டியன் முடிவு செய்தார்.

இளம்பெண்ணை கொன்று தற்கொலை

இதைத்தொடர்ந்து தனது கோழிப்பண்ணையில் பாம்பை குத்திக்கொல்வதற்காக வைத்திருந்த ஈட்டி போன்ற சுருக்கி என்ற ஆயுதத்தை எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில், தனலட்சுமியை பின்தொடர்ந்து வந்தார். அரியலூர்- திட்டக்குடி சாலையில் ஒரு வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, அருண்பாண்டியன் தான் வைத்திருந்த சுருக்கியால் தனலட்சுமியின் இடதுபுற முதுகில் பலமாக குத்தினார். இதில் தனலட்சுமி படுகாயம் அடைந்து துடிதுடித்தார். இதையடுத்து அவரை அரியலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்தநிலையில், அருண்பாண்டியன், சின்ன வெண்மணி கிராமத்தில் தனக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பிளஸ்-1 படித்து வந்த மாணவி, தனது வீ்ட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை: ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’ - கமல்ஹாசன்
நீட் தேர்வு காரணமாக அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்,மொகாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
4. தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
5. மறைமலைநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.