மாநில செய்திகள்

சென்னையில் 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து + "||" + 660 road contracts canceled in Chennai

சென்னையில் 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து

சென்னையில் 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து
அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் 660 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தேர்தலுக்கு முன் அவசரமாக இறுதி செய்யப்பட்ட 660 நகர சாலை ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்தது. 

சாலை ஒப்பந்தங்கள் குறித்து பொறியாளர்கள் குழு அளித்த அறிக்கையின் படி ரூ.43 கோடியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இதனால் ரூ. 43 கோடி இழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்று கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.