மாநில செய்திகள்

நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு + "||" + Study with international experts to find the route of elephants in the Nilgiris

நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு

நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு
நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்.
சென்னை,

கோவை மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானைகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி பகுதியில் யானைகளின் வழித்தடம் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பழையநிலைக்கே கொண்டுவரவும் சர்வதேச அளவிலான நிபுணர்கள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள்; முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகள் பற்றி முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
2. சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு
சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
3. சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு
சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
4. பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஏரிகளில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள ஏரிகளில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு அடுக்கடுக்கான உத்தரவுகளையும் அவர் பிறப்பித்தார்.
5. குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
சென்னையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.