மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் + "||" + 12 IPS Officers across Tamil Nadu relocated

தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகம் முழுவதும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.





சென்னை,

தமிழகத்தில் பணியாற்றி வரும் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், ரெயில்வே ஐஜி சுமீத் சரண், ஊர்க்காவல்படை ஐஜியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி தினகரன், சிலை தடுப்பு பிரிவு ஐஜியாகவும், திருச்சி ஆயுதப்படை டிஐஜி கயல்விழி, சென்னை போலீஸ் பயிற்சி டிஐஜியாகவும், திருவாரூர் எஸ்பி சீனிவாசன், திண்டுக்கல் எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த ரவளி பிரியா தஞ்சாவூர் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி விஜயகுமார், திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், தஞ்சாவூர் எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய், ராணிப்பேட்டை எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் எஸ்பியாகவும், அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு பிரிவு எஸ்பி தேவராணி, சைபர் கிரைம் எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த அருண் பாலகோபாலன், மவுண்ட் துணை கமிஷனராகவும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்பி சியாமளா தேவி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
4. 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
5. தாசில்தார்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.