மாநில செய்திகள்

6-வது நினைவு தினம்: அப்துல்கலாம் படத்துக்கு பா.ஜ.க. அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி + "||" + 6th Remembrance Day: BJP pays homage to Abdul Kalam Flower sprinkle tribute in the office

6-வது நினைவு தினம்: அப்துல்கலாம் படத்துக்கு பா.ஜ.க. அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி

6-வது நினைவு தினம்: அப்துல்கலாம் படத்துக்கு பா.ஜ.க. அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி
6-வது நினைவு தினம்: அப்துல்கலாம் படத்துக்கு பா.ஜ.க. அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி.
சென்னை,

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 6-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அப்துல்கலாமின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை அப்துல்கலாம் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல், சென்னை அசோக்நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அப்துல்கலாம் படத்துக்கு கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள சமத்துவ மக்கள் கழக தலைமை அலுவலகத்தில், கட்சி் தலைவர் எர்ணாவூர் நாராயணன், அப்துல்கலாம் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.