அரசு விதிகளை மீறியதால் சேலையூர் சார்பதிவாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்


அரசு விதிகளை மீறியதால் சேலையூர் சார்பதிவாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
x

அரசு விதிகளை மீறியதால் சேலையூர் சார்பதிவாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.

மதுரை,

பத்திரப்பதிவு துறையில் அரசின் விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பல மாவட்டங்களில் சார்பதிவாளர்கள் மற்றும் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சிலர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பதிவு துறை தலைவரால் போலி ஆவணப்பதிவை தடுப்பதற்காக பிறப்பிக்க அரசாணைகள் மற்றும் அரசு விதிகளை மீறியதாக 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.அதன்படி மதுரை ஒத்தக்கடை சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர்(பொறுப்பு) பணியில் இருந்த கார்த்திகேயன், உதவியாளர் ஷேக் அப்துல்லா, கொடைக்கானல் சார்பதிவாளர் ராதாகிருஷ்ணன், சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் (பொறுப்பு) பணியில் இருந்த ஜார்ஜ் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியின் உத்தரவின் பேரில் பதிவுத்துறை தலைவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்.

Next Story