மாநில செய்திகள்

நெல்லை அருகே, ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு + "||" + Near Nellai, jaundice affects 200 people in a single village

நெல்லை அருகே, ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

நெல்லை அருகே, ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் எனும் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுடிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி, குமரியில் கனமழை - குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
3. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 38 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 38 பேருக்கு கொரோனா
4. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
5. நெல்லை, தென்காசியில் 21 பேருக்கு தொற்று
நெல்லை, தென்காசியில் 21 பேருக்கு தொற்று